Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கபோறேன் என சொன்னால் சிரிப்பார்கள்: சீமான் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். நீண்ட காலமாக அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்கிற வாக்குவாதத்தில் விஜய்யின் பெயரும் உள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குமார் மு.களஞ்சியம் அளித்துள்ள ஒரு பேட்டியில் சீமான் சமீபத்தில் விஜய்யை தாக்கி பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

"விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்க போறேன்னு சொல்ல முடியாது.. அதை விட பெரிய நகைச்சுவை இருக்க முடியாது. அவர் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் தான். விஜய் தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். சீமான் நடிகர் சிம்புவை சூப்பர்ஸ்டார் ஆக்கப்போகிறேன் என சொன்னதில் தவறில்லை. கீழே இருப்பவரை தான் உயர்த்தி சூப்பர்ஸ்டார் ஆக்கமுடியும்" என அவர் கூறியுள்ளார்.