Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் இந்த ஹீரோவுடன் தானாம்! போடு மாஸ் தான்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இரண்டு வாரங்களை கடந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் ரூ 200 கோடி வசூலை தாண்டிவிட்ட இப்படம் ரசிகர்களை மகிழ்வித்தது.இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர ரசிகர்.

அவருக்கு இப்பட வாய்ப்பு ஒரு பெரும் பரிசு என்றே சொல்லாம். கடந்த 2015 லேயே கதை ரஜினியிடம் சொல்ல பின் கடந்த வருடம் தான் ரஜினியே அவரை கூப்பிட்டு படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.

இதெல்லாம் இருக்க சென்னை காசி திரையரங்கில் இப்படத்தில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் பண்ணபோவதாக கூறினார்.