Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இவ்வளவு பெரிய பேனரா? எந்த ஏரியாவில் பாருங்க

நடிகர்களுக்கு அவர்களது படம் வெளியாகும் தினத்திலும் அவர்களது பிறந்தநாளின்போதும் ரசிகர்கள் பேனர் வைப்பது சாதாரணம் தான். ஆனால் தற்போது இந்த நிகழ்வு, நடிகர்கள் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நடந்துள்ளது.

அதாவது இன்று மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பில் பேரன்பு படம் ரிலீஸானது. ஆனால் மம்முட்டியின் பேனரை விட படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனரை தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள ஆடையூர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர் மன்றத்தினர் தான் வைத்துள்ளனர்.