Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் மகள் சௌந்தர்யாவை இரண்டாவது திருமணம் செய்யும் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா, விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணத்திற்கு ரஜினி தனக்கு நெருங்கியவர்களுக்கு பத்திரிக்கை வைத்து வருகிறார்.

வரும் 10ம் தேதி பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. சௌந்தர்யா திருமணம் செய்ய போகும் விசாகன் என்பவர் வஞ்சகர் உலகம் என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தொழில் அதிபர் சூளூர் வணங்காமுடியின் மகனான விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் லபாரடரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார்.

விசாகன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. படித்து முடித்துவிட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். ரூ. 600 கோடி மதிப்புள்ள அபெக்ஸ் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

விசாகனுக்கும், பத்திரிகை துறையை சேர்ந்த கனிகா குமரனுக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.