தமிழ் சினிமாவில் ஒரு தனி ஸ்டைலாக காமெடி செய்து பலரையும் சிரிக்க வைத்தவர் மனோபாலா. அவரின் தோற்றமே அவருக்கு பெரும் பக்க பலம் என சொல்லலாம்.
பல படங்களில் நடித்து வரும் அவர் வீட்டில் தற்போது கெட்டி மேளச்சத்தம் ஒலித்துள்ளது. அவரின் மகன் ஹரீஷ்க்கும், பிரியா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
அதனையடுத்து மாலையில் கிண்டியில் உள்ள சொகுசு ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், கவுண்டமணி, உதயநிதி, விவேக், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.