கோலிவுட்டில் தற்சமயம் உள்ள காதல் ஜோடிகளில் அத்தனை பேரும் பார்த்து வியக்கும் காதல் ஜோடி விக்னேஷ் சிவன்- நயன்தாரா. சில ரசிகர்கள் பொறாமைப்படவும் தான் செய்கின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என கூறப்படும் ஒரு நடிகை ஒரு வளர்ந்து வரும் இயக்குனரை காதலிப்பது எப்படி சாத்தியப்படுகிறது என்பதை சமீபத்திய பேட்டியில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியுள்ளார்.
அதில், நல்ல விஷயங்களை அப்படியே ஏற்று கொள்கின்ற ஒருத்தர், விக்னேஷ் சிவன். இல்லனா நயன்தாரா போன்ற ஒருத்தர் அவரை காதலிக்க முடியாது. ஒரு சாதனை பெண்மணி ஒருத்தரை காதலிக்கிறார் என்றால் அவரிடம் எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன் இருக்க வேண்டும். அதை நான் விக்னேஷ் சிவனிடம் பார்த்தேன் என்றார்.