Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவம்! பொங்கி எழுந்த சினிமா பிரபலங்கள்

பிப்ரவரி 14 என்றதும் இப்போதெல்லாம் காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தான் நினைவிற்கு வருகிறது. நாடு முழுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 வீரர்கள் மரணமடைந்தனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருவர். பலரும் அக்குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் பயங்கர வாதத்திற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத கும்பல் பாகிஸ்தானின் பால்காட் பகுதியில் பதுங்கியிருந்த கேம்ப்களை மீது கோர தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கிய ஸ்பைடர் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் #IndiaStrikesBack #IndianAirForce என்ற டேக்கில் பலரும் இது குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சரியான பதிலடி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.