Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலை ஓங்கி எட்டி உதைத்த பிரபல நடிகை! உருண்டு விழுந்த விஷால்

நடிகர் விஷால் தன் தோழி அனிஷாவுடன் காதலில் இருக்கிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள். விஷாலின் திருமணத்தை தான் பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ரஜினி, கமல் என பிரபலங்களுக்கு ஜோடியாக டாப் ஹீரோயினாக ஜொலித்த நடிகை அமிபிகா கலர் காமெடி நைட்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

இதில் அவருக்கு சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் ஒன்று விஷாலும், அம்பிகாவும் நடித்த அவன் இவன் படத்தின் புகைப்படம். இதை பார்த்ததும் அம்பிகா நான் என் சினிமா அனுபவத்தில் யாரையும் நடிப்பில் கூட அடித்ததில்லை. இந்த படத்தில் விஷாலை எட்டி உதைக்கும் காட்சி.

நான் தயங்கிக்கொண்டே விஷாலிடம் சங்கடமாக இருக்கிறது, நான் லேசாக காலை அசைத்து உதைப்பது போல செய்கிறேன். நீங்கள் சமாளித்துக்கொள்ளுங்கள் என கூறினேன்.

ஆனால் அவர் பரவாயில்லை உதையுங்கள் என்றார். மேலும் இயக்குனர் பாலாவும் அதெல்லாம் விஷால் ஒன்றும் நினைக்க மாட்டார் சேச்சி. நீங்கள் உதையுங்கள் என கூறினார்.

இதனால் நானும் ஓங்கி எட்டி உதைக்க விஷால் உண்மையிலேயே உருண்டு விழுந்துவிட்டார். பின்னர் அவருக்கும் பேச்சுக்காக சொன்னால் இப்படியா என ஃபீல் பண்ணார் என அம்பிகா கூறியுள்ளார்.