Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடனே நிறுத்துங்கள்.. ரசிகர்களை திட்டிய தளபதி 63 பாடலாசிரியர்

தொடர்ந்து விஜய் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார் பாடலாசிரியர் விவேக். ஆளப்போறன் தமிழன் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்து சர்கார் படத்திற்கும் பாடல்கள் எழுதினார். அடுத்து விஜய்யின் தளபதி63 படத்திற்கும் பாடல்கள் எழுதி வருகிறார்.

விஜய் ரசிகர்கள் பலரும் விவேக்கிடம் ட்விட்டரில் பேசி வருவது வழக்கம் தான். அவரும் முகம்சுளிக்காமல் அனைவருக்கும் ட்விட்டரில் பதில் அளிப்பார். அதனாலேயே விவேக்கிற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ரசிகர்கள் சிலர் ட்ரெண்ட் செய்த ஹாஸ்டேக் பார்த்து விவேக் கோபத்துடன் பேசியுள்ளார்.

#50DaysToGoForLyricistVivekAnnaBday என அவரின் பிறந்தநாளுக்கு 50 நாள் இருக்கிறது என கூறி ட்ரெண்ட் செய்வதை பார்த்த அவர் "இதை நிறுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்று மட்டும் சந்தோசமாக இருந்தால் போதாது, நாளை நம் வாழ்க்கை நன்றாக இருக்க உங்கள் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள்" என அறிவுரை கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் சொல்வதை யாரும் கேட்ட பாடில்லை. அந்த ஹாஸ்டேக் இன்னும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு தான் இருக்கிறது.