Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பண மோசடியால் இயக்குனர் கைது- புழல் சிறையில் அடைக்கப்பட்டாரா?

கடந்த 2015ம் ஆண்டு கமர்கட்டு என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.

இதயம் திரையரங்கம் என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதற்காக சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் ரூ. 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இவருடன் சேர்ந்து விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்து தயாரிக்க முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில் சொன்ன தேதியில் ராம்கி பணம் தராததால் பைனான்சியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயத்தால் தலைமறைவான ராம்கி மற்றும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த 27ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.