Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங்கில் பிஸியான தனுஷ்.. பிரபல நடிகருடன் கோவிலுக்கு சென்ற ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் குற்றாலம் பகுதியில் துவங்கியது. தற்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும், சினேகாவின் கணவர் பிரசன்னாவும் ஷூட்டிங்கை பார்க்க சென்றுள்ளனர்.

தனுஷ், சினேகா ஆகியோர் ஷூட்டிங்கில் பிசி ஆகிவிட்டதால், ஐஸ்வர்யா மற்றும் பிரசன்ன மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

இவர்கள் கோவிலுக்கு வந்துள்ளதை அறிந்த பலர் அவர்களை பார்க்க கூடிவிட்டனர். அதனால் கோவில் அருகில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்துள்ளது.