Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் எனது கடைசி படம்! RRR பட ப்ரஸ்மீட்டில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேச்சு

பாகுபலியின் இரு பாகங்கள் மூலமாக இந்திய சினிமா முழுவதும் கவனிக்கப்பட கூடிய இயக்குனரானார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த வெற்றிகளை தொடர்ந்து RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்.டி,ஆர், ராம்சரண், ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ப்ரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய ராஜமௌலி, எனது கனவு படம் மகாபாரதம். ஆனால் எனது அடுத்த படைப்பு மகாபாரதம் அல்ல. அது எனது கடைசி படமாக இருக்கலாம். அதன் கதை இன்னும் எனது மன ஓட்டத்தில் இருக்கிறது. மகாபாரத கதையை படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.