Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான தேர்தல் நேரத்தில் விஸ்வாசம் பட பிரபலம் சொன்ன எச்சரிக்கை! கவனித்தீர்களா இதை

2019 லோக் சபா தேர்தல் தொடங்கிவிட்டது. எல்லோரும் தங்கள் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தெடுக்கும் நாள் வந்துவிட்டது. ஏப்ரல் 18 என தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது.

அரசியலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நீண்ட நாளாக ஒரு பந்தம் இருந்து வருகிறது என சொல்லலாம். சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட இப்போது அரசியலில் இறங்கிவிட்டார்கள்.

ரஜினிகாந்த் இந்த முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்து விட்டார். இந்நிலையில் பலரும் தேர்தல், ஓட்டு பற்றிய விழிப்புணர்வுகளை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி பொய்யான வாக்குறுதிகளையும் பசப்பலான சமாதானங்களையும் இந்த தேர்தல் களத்தில் நம்பாதீர்கள்.

கட்சிகளையும், சின்னங்களையும் தாண்டி உங்கள் தொகுதிக்கு குரல் கொடுக்கும் உண்மையான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார்.