Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மைக்கேல் ஜாக்சனின் மரணத்தின் அதிர்ச்சி பின்னணி! இறந்த நேரத்தில் நடந்த அதிசயம் - சொன்னால் நம்பமாட்டீர்கள்

மைக்கேல் ஜாக்சன் என்று சொல்லும் போதே உடலுக்குள் ஏதோ ஒரு ஆட்டம் இருக்கும். மனதிற்கு மௌனமாக மகிழ்ச்சி இருக்கும். எல்லாம் அவர் ரசிகர்களுக்குள் செய்த மாயம்.

அவருக்கு தான் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை. இதற்காக அவர் மிகவும் முயற்சி எடுத்து பல விசயங்கள் செய்தார். அவரின் தலை முடியிலிருந்து, பாத நகங்கள் வரை உடல் நிலையை கண்காணிக்க 12 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.

அவர் தனக்கு உடற்பயிற்சிக்காகவே 15 பேரை நியமித்திருந்தாராம். அவர் படுத்து தூங்கும் பெட் கூட சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்

அவருக்கு உணவு பரிமாறும் முன் அந்த உணவை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்வார்களாம். இறக்கும் முன்பான 25 வருடங்களில் அவர் மருத்துவர்களுடன் கலந்தலோசனை செய்து தான் எதையும் செய்வாராம்.

அதே வேளையில் அவருக்கு தேவையான உடல் உறுப்புகளை தானம் செய்ய தகுந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களையும் இவரே தன் செலவில் பாதுகாத்து பராமரித்து வந்தார்.

இறக்கும் முன் அவர் செய்த கடைசி நேரலை நிகழ்ச்சி 2.5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை இந்த சாதனையை யாராலும் முந்த முடியவில்லை.

ஜாக்சன் மரணத்தை மாற்ற நினைத்தார். ஆனால் அது அவரை மாற்றிவிட்டது. மரணத்தை வெல்ல எவரால் முடியும்? 150 வயது வரை வாழ நினைத்தவர் தன் 50 வது வயதில் ஜூன் 09 மாலை 3.15 நிமிடத்தில் மரணமடைந்தார்.

அந்நேரம் டிவிட்டர், மெசெஞ்சர் செயலிழந்து போக, 8 லட்சம் பேர் அவரை இணையதளத்தில் தேடியிருக்கிறார்கள்.