Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நேரத்தில் இப்படியொரு டிரைலரா! PM Narendra Modi படத்தின் ட்ரைலர் இதோ

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.