Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரிதாபமாக உயிரிழந்த இளம் இயக்குனர்! ஷீரடி செல்லும் போது திடுக்கிட வைத்த மரண சம்பவம்

மரணத்தை மட்டும் யாராலும் வெல்லவும் முடியாது, கணிக்கவும் முடியாது என்பது உலகறிந்த ஒன்று. சாலை விபத்துகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் சினிமா பிரபலங்கள் சிலர் சாலை விபத்தால் உயிரிழந்தனர். தெற்கு கர்நாடகாவின் அடுத்த Moodabidri பகுதியில் சாலையில் நின்ற மரத்தின் மீது கார் ஒன்று படுவேகத்தில் மோதியுள்ளது.

இதில் 30 வயதுள்ள Harris Haudhwal என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலிஸ் விசாரணையில் அவர் துளு மொழியை சேர்ந்த சினிமா பட இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் ஷீரடி செல்லும் போது தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் வந்த விபத்து என்ன சொல்லப்படுகிறது.