Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராக்ஸ்டார் ரமணியம்மாளின் தற்போதைய நிலைமை இதுதானாம்! அவரே கூறிய அவலம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரமணியம்மாள். இந்த நிகழ்ச்சியை இவருக்காகவே பார்த்தவர்கள், இவருக்கு ராக்ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்துவிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு 5 லட்ச ரூபாய் பணம், ஐந்து செண்ட் விவசாய நிலமும் பரிசாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொகையில் ஒரு பைசாவை கூட தொடவில்லை என கூறுகிறார், ரமணியம்மாள்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாடி இருந்த அதே வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். அந்த தொலைக்காட்சி மூலமாக இன்று உலகளவில் பேமஸாகியுள்ளேன். அந்த டிவியில் பரிசு தொகையாக தருவதாக கூறப்பட்ட 5 லட்சத்தில் 1 லட்ச ரூபாயை மாவு கம்பெனி ஒன்று தருவதாக கூறினர். ஆனால் இதுவரை அவர்கள் தரவில்லை. மீதி பணத்தில் வரி எல்லாம் போக 2,80,000 கிடைத்தது. அதை எனது 7 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்துவிட்டேன்.

விவசாய நிலம் திண்டிவனம் தாண்டி உள்ளது. விவசாய நிலம் என்பதால் விவசாயம் தான் பார்க்க வேண்டும் என கூறிவிட்டனர். நான் எங்க போய் அதெல்லாம் கவனிப்பது என்றார்.

ரமணியம்மாளின் இந்த நிலைமையை குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் கூறுகையில், அவருக்கு கண்டிப்பாக நிலம் கிடைக்கும். சில வழிமுறைகளால் தாமதம் ஆகியிருக்கும். நிலத்தை வாங்கி கொடுப்பதில் எங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றனர்.