Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவுக்கு ஆதரவாக அதிரடி கொடுத்த விஸ்வாசம் பிரபலத்தின் மனைவி! ராதா ரவிக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது நயன்தாரா, ராதா ரவி பிரச்சனை தான். நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி நயன்தாராவை பற்றி தவறாக பேசிய சர்ச்சையானது.

இதனால் காதலர் விக்னேஷ் சிவன் அடுத்தடுத்து டிவிட்டரில் பதிலடி கொடுக்க கடைசியில் ராதா ரவி இருக்கும் திமுகவிடமே புகார் கொடுத்துவிட்டார். கட்சி தலைமை ராதா ரவியை கட்சியிலிருந்து நீக்கவிட்டது. ராதா ரவிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடித்திருந்த விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவியும் எழுத்தாளருமான பத்மாவதி நடிகையாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே பொதுமேடையில் எதற்காக அப்படி பேச வேண்டும் என ராதா ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.