Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த பார்த்திபன் - சீதா மகள் திருமணம்! அழகான புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் தனித்திறமையான நடிகர் பார்த்திபன். அவரின் மனைவி நடிகை சீதா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே. இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு மகள்களும், மகனும் இருக்கிறார்கள்.

இதில் இளைய மகள் கீர்த்தனாவுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அண்மையில் அவரின் மூத்த மகள் அபிநயாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி 20 ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவைன் கொள்ளுப்பேரனும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் நரேஷ் கார்த்திக்குடன் நேற்று சென்னை அடையாறு லீலா மகாலில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் ராதா ரவி, லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு, சிவக்குமார், கார்த்தி, ராதிகா, நிரோஷா என பல பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிஉலகம் சார்பாக மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்..