Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பட பிரபலத்தை கவலையில் ஆழ்த்திய மரண சம்பவம்! பரிதாப மரணம்

அஜித் நடித்த விஸ்வாசம் 11 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் அப்பா மகளின் உறவை மிக அழகாக எடுத்துரைத்தது. 100 வது நாளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பலரையும் ஈர்த்த பாடல்களில் ஒன்று டங்கா டங்கா. குழந்தைகளை மிகவும் கவர்ந்துவிட்டது. இதை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி. அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.

அவரை தற்போது இளம் மாணவியின் தற்கொலை சம்பவம் பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் டிவிட்டரில் “பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு கடினமாக இருந்ததாக ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி படித்தேன். மிகவும் வலியாக இருந்தது. பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு வேண்டுகோள். மாணவர்களை வாழவைப்பதற்கு வினாத்தாள் தயாரியுங்கள்" என கூறியுள்ளார்.