Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் விஜய் போல இனி கோர்ட் வரை போக தேவையில்லை! தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

சர்கார் படத்தில் விஜய் ஒட்டு போட வாக்குப்பதிவு நடக்கும் இடத்திற்கு வரும்போது அதை இதற்குமுன்பே ஒருவர் கள்ளஒட்டாக பதிவிட்டிருந்தது தெரிந்து அதிர்ச்சியாகி கோர்ட் மூலம் தீர்வு பெறுவார்.

இந்த படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் 49P என்கிற சட்டம் இருப்பதை பிரபலப்படுத்தியது. இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய்க்கு நடந்தது போன்ற சூழ்நிலை எழுந்தால் என்ன செய்யவேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது.

ஒருவர் ஓட்டு போட வரும்போது அதை வேறு ஒருவர் கள்ளஓட்டாக பதிவிட்டிருப்பது தெரிய வந்தால் அந்த உண்மையான நபரும் தன் வாக்கை பதிவு செய்யலாம். ஆனால் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பதிலாக ballot paper கொடுக்கப்பட்டு அதில் அவர் வாக்கு பதிவு செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.