Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து விஸ்வாசத்துடன் வெளியான படத்தை ரீமேக் செய்ய இருக்கும் போனி கபூர்

இந்தியில் நடிகர் அமிதாபச்சனின் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த பிங்க் படத்தை தமிழில் அஜித்குமாரை வைத்து நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

தீரன் இயக்குனர் எச்.வினோத் இயக்கிவரும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி எதிர்பார்க்காத நேரத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்ற F2- Fun and Frustration படத்தை ஹித்தியில் ரீமேக் செய்யவுள்ளாராம்.

இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் இந்த ரீமேக் படத்தை பாலிவுட் இயக்குனர் அனீஸ் பாஸ்மீ இயக்கவுள்ளாராம். F2, பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் வெளியான நேரத்தில் டோலிவுட்டில் ரிலீஸான படம் என்பது குறிப்பிடத்தக்கது.