Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாயினு சொல்ல கூடாதாம், சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் ஆதங்கம்

சூப்பர் டீலக்ஸ் நேற்று திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் இப்படம் கண்டிப்பாக பல விருதுகளை பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் குறித்து பல தகவல்களை பேசியுள்ளார்.

இதில் குறிப்பாக சென்சார் போர்ட் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார், அவர் கூறுகையில் ‘சென்சாரில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு லாஜிக்காக பதில் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் ஒருவரை பார்த்து நாயி என்று கூட திட்டக்கூடாது என்கிறார்கள், கோபத்தில் இருப்பவன் அந்த வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது என்றால் என்ன செய்வது’ என கூறியுள்ளார்.