சூப்பர் சிங்கர் பூவையாருக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம், அவரே சொல்லிவிட்டாரா, அப்றம் என்ன!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் பூவையார். வடசென்னையை சார்ந்த இவர் இந்த சிறுவயதிலேயே பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் பூவையாருக்கு என்று தற்போது மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உருவாகி விட்டது, இவர் தான் சூப்பர் சிங்கரில் வெற்றி பெறுவார் என்றும் கூறி வருகின்றனர்.
இவர் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து பாட, ஆதி அதில் செம்ம இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.
அதனால், தன்னுடைய ஆல்பம் ஒன்றில் பூவையாரை பாட வைப்பதாக ஆதி வாக்கு கொடுத்துள்ளார்.