பதிவு திருமணம் தான் செய்துகொண்டோம், காரணம் இதுதான்- முக்கிய விஷயத்தை பதிவு செய்த இயக்குனர் நவீன்
மூடர் கூடம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நவீன்.
இப்போது அவர் அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க படம் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படி படத்தில் பிஸியாக இருக்கும் நவீன் திடீரென்று தனது பதிவு திருமண புகைப்படத்தை டுவிட்டரில் போட்டுள்ளார், இதனால் மக்கள் அவருக்கு இப்போது தான் திருமணம் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது.
தற்போது திருமண புகைப்படம் போட்டு மதம் பார்க்காமல் நடந்த திருமணம் எங்களுடையது என சில பதிவு போட்டுள்ளார். சமத்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.
எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம் pic.twitter.com/F0rpz5Q2n9
— Naveen.M (@NaveenFilmmaker) April 16, 2019