அட்லீ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராகிவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது தளபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி வருகின்றார்.
இப்படத்தின் கதை என்னுடையது என ஒரு உதவி இயக்குனர் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றார், அவர் இதுக்குறித்து ஒரு பிரபல இதழின் யு-டியூப் சேனலில் பேசியுள்ளார்.
அதில் ‘இது என் கதை தான் என நிரூபிக்க தினமும் அட்லீ ஆபிஸிற்கு சென்றேன், ஆனால், உள்ளே இருந்துக்கொண்டே சார் இல்லை என்றார்கள்.
தினமும் நீண்ட நேரம் வெளியில் நிற்க வைத்தார்கள், கிட்டத்தட்ட மிகவும் அவமானப்படுத்தினார்கள்’ என்பது போல் பேசியுள்ளார்.