Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! அத்தனை தல ரசிகர்களும் கொண்டாடும் பிரம்மாண்ட தருணம்

அஜித் என்று சொன்னாலே இன்று அனைவருக்கும் பிடிக்கும். அந்தளவிற்கு அவர் எல்லோரிடமும் இனிமையாக மரியாதையுடன் பழகுவார், எளியவருக்கு தாமாக முன் வந்து உதவி செய்வார் என பலரும் அவரை புகழ்வார்கள்.

அவர் இன்று அனைவரும் தன்னையே நோட்டம் விடும் அளவிற்கு தன் தகுதியை உழைப்பின் உயர்த்தியிருக்கிறார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள்.

அது அஜித்தின் வாழ்வில் உண்மை தான். அவர் காதலித்த நடிகை ஷாலினி அவரின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தவர். அஜித் பலமுறை இக்கட்டான நேரத்தில் இருந்தபோது உடனே இருந்து அவருக்கு பலம் சேர்த்தார்.

உண்மை காதலுக்கு இந்த ஜோடியும் ஒரு உதாரணம். கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு தான் என்று மகிழ்வுடன் சொல்லலாம்.

அமர்க்களம் படத்தில் தொடங்கிய இவர்கள் காதல் திருமணத்தில் கைகூடியது. அதில் இருவரும் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு பாடல் இவர்களுக்கே எழுதப்பட்டது போல இருக்கும்.

அந்த தம்பதிக்கும் இன்று திருமணம் நாள். ஏப்ரல் 24, 2000 த்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. சினிஉலகம் அவர்களை பெருமையுடன் வாழ்த்துகிறது.