Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கு எதிராக தேர்தலில் களத்தில் போட்டியிடும் நடிகர்! பரப்பரப்புடன் கூடும் நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கர் தேர்தல் கடந்த 2015 ல் நடைபெற்றது. ராதா ரவி அணி, நாசர் அணி மோதியதில் நாசர் குழு ஜெயித்தது. விஷாலால் இந்த தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த அணியில் விஷால், பொன்வண்ணன், கார்த்தி என பலர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக்காலம் கடந்த 2018 அக்டோபரில் முடிவடைந்துவிட்டது.

ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கான கால அவகாசமும் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில் தேர்தல் நாள் குறித்த பேச்சுவார்த்தைக்காக நாளை நடிகர் சங்கம் கூடுகிறது. தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் தலைமையில் அடுத்த முறையும் இதே அணி போட்டியிடுகிறார்களாம்.

மேலும் தற்போது செயற்குழு உறுப்பினராக இருக்கும் நடிகர் உதயா எதிரணி சார்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறாராம்.