தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித். இவர்களை வைத்து படம் எடுக்க பலரும் லைனில் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க அஜித் கேட்டதற்காக தன் சொந்த கதையை ஒதுக்கி வைத்துவிட்டு, பிங்க் படத்தின் ரீமேக்கை வினோத் எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் வினோத் அடுத்து, ரஜினி, விஜய்யுடன் பணியாற்றுகின்றார் என ஒரு சில பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.
ஆனால், பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் வினோத்தையே நேராக தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
அதற்கு வினோத் ‘சார் ரஜினி, விஜய் அவர்களிடம் நான் பணியாற்றவில்லை, இன்னும் ஒரு படம் அஜித் சாருடன் உள்ளது, அதுவும் எப்போது என்று தெரியவில்லை’ என வினோத் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.