காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது ஒல்லிக்குச்சி உடம்பை வைத்தே பல படங்களில் காமெடி செய்திருப்பார்கள்.
ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம்.
சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், அதன் பிறகுதான் என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்கிறார்.
சென்னை திருவல்லிக்கேணியில் கமேஷ்வரா சுவாமி தற்போது வசித்து வருகிறாராம்.