Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படி ஒரு காட்சி எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், செல்வராகவனே வருத்தம், அப்படி என்ன காட்சி அது?

செல்வராகவன் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் செல்வராகவன் முதன் முறையாக முன்னணி நடிகர் சூர்யாவுடன் கைக்கோர்த்த படம் தான் NGK. இப்படம் மே 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசிய செல்வராகவனிடம் ‘ஏன் மயக்கம் என்ன படத்தில் பெண்களை திட்டுவது போல் காட்சிகள் வைத்திர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக அது தவறு தான், அப்படி ஒரு காட்சி எடுத்திருக்க கூடாது, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.