Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாடாளுமன்ற தேர்தல் முடிவு! கமலை அசால்ட்டாக கலாய்த்த பிரபல இயக்குனர்

2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. இதில் ஆரம்பத்திலிருந்தே பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி விரைவில் ஆட்சியமைக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் இக்கட்சிக்கு 3வது 4வது இடங்களே கிடைத்தன.

இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக சூதுகவ்வும், பீட்ஸா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான சி.வி.குமார் டுவிட்டரில் உடைத்த டிவியை ஒட்டவெச்சு பிக்பாஸ் பாரு என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பழைய அரசியல்வாதிகளின் பெயர்களை கூறும் போது கோபமாக கமல் அங்கிருக்கும் டிவியை உடைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.