Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இயக்குனரின் அடுத்த படத்திற்கு வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்!

அஜித்தின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டரான படம் மங்கத்தா. இப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் விரைவில் கசட தபற என்ற படம் உருவாகவுள்ளது.

ஹரிஷ் கல்யாண், சாந்தனு, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா கசண்ட்ரா உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படத்தை விஜய்யின் புலி பட இயக்குனர் சிம்பு தேவன் இயக்கவுள்ளார்.

மேலும் முக்கிய சிறப்பம்சமாக இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம் CS, ஷான் ரோல்டன், ஜிப்ரான், ப்ரேம்ஜி என 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 எடிட்டர்கள் பணிப்புரியவுள்ளனர்.

இந்நிலையில் இந்த சிறப்பம்சத்தை குறிப்பிட்டு ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிவரும் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்தியுள்ளார்.