Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்காந்த்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினா இது! இன்னும் அழகாக இருக்கிறாரே - தேர்தலில் மெகா வெற்றி

நடிகர் விஜய்காந்த் வயது, உடல் நிலை சரியில்லாததால் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது அமெரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்து வருகிறார்.

அவரின் மனைவி பிரேமலதாவும், அவரின் மகனும் தான் கட்சியை வழிநடத்திவருகிறார்கள். அண்மையில் அதிமுக வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளார்கள்.

இதற்கு காரணம் அவரின் மனைவியும், மகனும் தான் என சிலர் விமர்சித்து வருகிறார்கள். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். நீண்ட நாட்களாக அரசியல் செய்து வரும் இவர் ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல விஜயகாந்துக்கு ஜோடியாக அரசாங்கம் படத்தில் நடித்தவர் நவ்னீத் கவுர். மகராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார். எற்கனவே அவரின் கணவர் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருக்கிறாராம். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்ராவதிக்கு விமான நிலையம். டில்லிக்கு நேரடி ரயில் சேவை, புனே தினமும் ரயில் வசதி இது தான் என் முதல் வேலை என கூறி ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.