Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர், நடிகையின் குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்திய மரணம்! உறவினர்கள், ரசிகர்கள், சினிமா துறையினர் சோகம்

ஹிந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடிகர், அஜய் தேவ்கண், நடிகர் கஜோல். கணவன் மனைவியான இருவரும் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருப்பவர்கள்.

அண்மையில் அஜய் நடிப்பில் தி தி பியார் தி படம் வெளியானது. நடிகை கஜோல் அண்மையில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

தற்போது அவர்களின் குடும்பத்தை சோகம் சூழ்ந்துள்ளது. அஜய்யின் அப்பா வீரு தேவ்கண் உடல் நலம் சரியில்லாமல் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீரு தேவ்கண் சினிமாவில் 100 க்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர். அமிதாப் பச்சன், சுஷ்மிதா சென், மனிஷா கொய்ராலா என பலரின் படங்களில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

77 வயதான அவர் இன்று காலை 6 மணிக்கு காலமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதி சடங்குகள் மாலை 6 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது.