Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சை பேச்சு - கைதுக்கு பயந்து இயக்குனர் பா.ரஞ்சித் எடுத்த முடிவு

கபாலி, காலா என பல படங்களை இயக்கிய பா.ரஞ்சித் சமீபத்தில் ராஜ ராஜ சோழன் பற்றி பேசியது சர்ச்சையானது. அவர் தொடர்ந்து சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவருவதாக கடும் விமர்சனம் எழுந்தது.

அது தொடர்பாக பா.ரஞ்சித் மீது பல இடங்களில் போலீஸ் வழக்குகளும் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் கைதாகலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.