Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு தளபதி ரசிகர்கள் தான் எல்லாமே, அடுத்து விஜய் படம் தான்: முன்னணி இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் தளபதி63 முடிந்தபிறகு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

முதலில் அவர் மோகன்ராஜா இயக்கத்தில் தான் அடுத்து நடிக்கிறார் என செய்திகள் வந்தது. இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மோகன்ராஜா "என்னுடைய தவறுதான். எப்போ வரீங்க என உரிமையாக விஜய் கேட்கிறார். ஆனால் இப்போதைக்கு தனி ஒருவர் 2 மட்டுமே என் மனதில் உள்ளது. அவருக்கான கதை பணிகளும் நடந்துவருகிறது. அதற்கான நேரம் அமையவேண்டும்" என கூறியுள்ளார்.

"விஜய் பேன்ஸ் கிடைத்தது எனக்கு பெரிய சந்தோசம். என்னை எப்போதும் ட்ரெண்டில் வைத்திருப்பது அவர்கள் தான். தளபதி பேன்ஸ் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். விஜய் படம் பண்ணும் போது மிக பிரம்மாண்டமாக இருக்கும்" என அவர் மேலும் கூறியுள்ளார.