Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினி பட பிரபலம் மீது கடும் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி - அடிதடியால் கைது சம்பவம்

விஜய் நடித்த சர்கார், ரஜினிகாந்த் நடித்த 2.0 படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றிவர் ஜெயமோகன். இவர் அங்காடித்தெரு, கடல் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளாஅர்.

எழுத்தாளரான ஜெயமோகன் மலையாளம், தமிழ் மொழிகளில் பல எழுத்து படைப்புகளை கொடுத்துள்ளார். இவர் நாகர் கோவிலை சேர்ந்தவர்.

அண்மையில் தான் வசிக்கும் பார்வதி புரத்தில் ஜெயமோகன் இன்று காலை கடை ஒன்று தோசை மாவு வாங்கியுள்ளார்.

மாவு புளித்து போனதால் அதை கடைக்காரரின் முகத்தில் வீசி எறிந்து வேறு மாவு கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடைக்காரருக்கும் இவருக்கும் வாக்குவாதம் நடக்க கடைசியில் மோதலாகி அடிதடியாகியுள்ளது. இதில் ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் காயமடைந்த அவரை போலிசார் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையின் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். கடைக்காரரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.