Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடு செய்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு வரலட்சுமி சரத்குமாரும் ராதிகா சரத்குமாரும் தங்களது கண்டனங்களை கடுமையாக கூறியிருந்த நிலையில், இதுகுறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த விஷால், சரத்குமாரை விமர்சித்து வீடியோ வெளியிடவில்லை. நாங்கள் செய்ததை சொல்லவே வீடியோ வெளியிட்டோம். ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.