Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகி சின்மயியை சீண்டிய இயக்குனர்! என்ன கூறிவிட்டார் பாருங்க

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், சயிப் அலி கான், நம் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்தனர்.

போட்டியை காண சென்ற இடத்தில் ரன்வீர் சிங் ஷிகர் தவானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் ரன்வீர் சிங் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.

ரன்வீர் சிங்கின் இப்புகைப்படத்தை பார்த்த இயக்குநர் சி.எஸ்.அமுதனோ, சின்மயி இந்த கூலிங் கிளாஸ் உங்களுக்கு பிடிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அமுதனின் ட்வீட்டை பார்த்த சின்மயியோ, பாவம் போன்று இருக்கும் ஸ்மைலியை பதிலாக போட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலில் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார் சின்மயி. அந்த புகைப்படத்தில் சின்மயி அணிந்திருந்த பெரிய கூலிங் கிளாஸை பார்த்த அமுதன், வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று கேட்டு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.