Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி63ல் இணையும் முன்னணி நட்சத்திரத்தின் மகன்

நடிகர் விஜய்-அட்லீ கூட்டணியில் தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளிவருகிறது. அதை கொண்டாட தளபதி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் பற்றி மேலும் ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் ஓ காதல் கண்மணி படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி நிறுவனம் அமீன் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'காத்திருங்கள்' என கூறியுள்ளது. இதனால் அவர் தளபதி63ல் பாடியுள்ளார் என தகவல் பரவி வருகிறது.