தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஒருவராக கலந்து கொண்டுள்ள பருத்தி வீரன் சித்தப்பு சரவணன் தனது வாழ்வில் நடந்த சோகங்களை பற்றி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சரவணன்கிட்ட எதுனா ஒன்னு இருந்தால் தான் மக்கள் ஏற்றுபார்களா? எதுவும் இல்லையென்றால் ஏற்று கொள்ள மாட்டார்களா? பிறந்தால் அதிர்ஷ்டத்துடன் பிறக்க வேண்டும்.
வாழ்வில் தனது திறமையை காட்டிய பின்னரும் அதிர்ஷ்டம் என்பது வேண்டும். அது தான் என்னிடம் இல்லை. சொல்லப்போனால் இதுவரை பிக்பாஸ் ஷோவை ஒரு காட்சி கூட பார்த்ததில்லை. அனைவரும் சொன்னார்கள், உனக்கு இல்லையென்றாலும் உனது குழந்தைக்காகவாவது பிக்பாஸ் வீட்டிற்கு செல் என்று. இதன் மூலமாக என் வாழ்வில் எதாவது நடக்கும் என்று நினைக்கிறேன் என கூறினார்.