இலங்கை போரில் குண்டால் பாதிக்கப்பட்ட தாய்! பிக்பாஸ் போட்டியாளர் கண்ணீர் மல்க பேச்சு
தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசன் கோலகலமாக இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நகைச்சுவைக்கு, சண்டைக்கு, அமைதிக்கு என ஒவ்வொரு பண்புகளிலும் ஒவ்வொருவர் என பிரித்து பிரித்து ஆட்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஒருவராக சென்றிருப்பவர் மாடலிங் உலகை சேர்ந்த தர்ஷன். மாடலிங் மட்டுமல்லாமல் சாஃப்ட்வேர் என்ஜீனியரான இவர் பிறப்பதற்கு முன்னரே 1987ல் இலங்கையில் நடந்த போரின் போது குண்டு ஒன்று இவரது தாயின் வயிற்று பகுதியை தாக்கியுள்ளது. அந்த வலியிலேயே தான் என்னை மற்றும் எனது அண்ணனை அவர் வளர்த்தார் என கண்ணீருடன் தர்ஷன் கூறியுள்ளார்.