ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தர்பார். அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மேலும் தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதனை இயக்குநர் சீனு ராமசாமி உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் @VijaySethuOffl யுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று
— Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2019
இன்று சூப்பர் ஸ்டார் தியானி @rajinikanth அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5bDy5BEGwq