Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, அஜித், விஜய் பட விநியோகஸ்தர் மரணம்! ஒரு பிரபலம் கூட கண்டுகொள்ளாத பரிதாபம்

2000களில் தமிழ் சினிமாவில் சினிமா, இசை, பொழுதுபோக்கின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருந்தவர் சுவாமிநாதன். பிரமிட் சாய்மிரா சுவாமிநாதன் என்றால் அந்த சமயத்தில் தெரியாத கோலிவுட்டினரே இருக்க மாட்டார்கள்.

2007ல் கண்ணாமூச்சி ஏனடா என்ற படத்தை தயாரித்த இவர் ரஜினியின் குசேலன், அஜித்தின் பில்லா, விஜய்யின் அழகிய தமிழ்மகன், ஆர்யாவின் நான் கடவுள், ஜோதிகாவின் மொழி உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.

சில நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார். இத்தனை முன்னணி நடிகர்களின் படங்களை விநியோகம் செய்திருந்தாலும் இவரது இறுதி சடங்கிற்கு எந்த ஒரு சினிமா பிரபலமும் தகுந்த மரியாதை செய்யவில்லை. இதனால் பிரபல தயாரிப்பாளருக்கே இந்த நிலைமையா என கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.