Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை கூட்டத்தில் அடிக்க சென்ற Youtube பிரபலம்! விழாவில் நடந்த செயல்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் கலவையான விமர்சனங்களால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விமர்சனங்களை படக்குழுவும் பணிவாக ஏற்றுக்கொண்டது.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார். இதன் மூலம் சினிமாவில் சாதிக்க துடிப்படிவர்களுக்குள் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அவரின் தயாரிப்பில் கனா படத்தை தொடர்ந்து Youtube பிரபலங்களை கொண்டு இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில பைத்தியகார அரசியல் வாதியாக நிஷாந்த் நடித்திருந்தார். கையில் குச்சி வைத்து எல்லோரையும் அடிப்பாரே படத்தில்.

இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் குச்சியை நிஷாந்திடன் கொடுத்து யாரை இப்போது அடிப்பீர்கள் என கேட்க நிஷாந்த் சிவகார்த்திகேயனிடம் சென்று ஞாயிற்றுக்கிழமை ஃபங்கன் வைப்பீர்களா, அதிலும் காலை அல்லது மதியத்தில் வைத்தால் சாப்பாடு போடவேண்டாம் என்பதால் மதியத்திற்கு மேல் வைத்து டீ ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பிவிடலாம் என முடிவு செய்துவீட்டீர்கள் அப்படித்தானே என கூறினார்.