Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்த குழந்தைக்கு சிறப்பு பரிசு கொடுத்து அசத்திய டிவி பிரபலங்கள்! கணேஷ், நிஷா கலக்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ். யோகா, முட்டை என சில விசயங்களால் ரசிகர்களிடம் ரீச் ஆனார். விளம்பரங்களில் நடித்து வரும் அவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

அவரின் மனைவி நிஷா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் இருந்து வருகிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

அண்மையில் நடைபெற்ற வளைகாப்பு வைபவத்தை தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது. கணேஷ் தன் தேவதையை கண்ட மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியதோடு ராணிக்கு சூட்டும் கிரீடம் போன்ற வெள்ளை கல் டாலர் செயின் ஒன்றை குழந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.