Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்

பிக்பாஸ் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த முதல் நாளே அவருக்கு ஆர்மி உருவாக்கிவிட்டனர் ரசிகர்கள். ஓவியாவை விட படுவேகமாக பாப்புலர் ஆகிவிட்டார் இவர்.

இந்நிலையில் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீரியல் புகழ் இயக்குனர் பிரவீன் பேனட் அளித்துள்ள பேட்டியில் லாஸ்லியா பற்றி பேசியுள்ளார். 'அவர் ஹீரோயின் மெட்டீரியல். அவர் சீரியல்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் பிக்பாஸில் இருந்து அவர் வெளியே வருவதற்குள் 10 படங்கள் புக் ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் ராஜா ராணி சீரியல் 2ம் சீசன் விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.