Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் லொஸ்லியா செய்தது தான் தவறு, உண்மையில் சாக்‌ஷி எப்படி? தோழி கூறிய தகவல்

பிக்பாஸில் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவை பெற்று வருபவர் என்றால் அது லொஸ்லியா தான். அதே சமயம் வெறுப்பை சம்பாதிப்பவர் சாக்‌ஷி.

ஆனால் சாக்‌ஷி உண்மையில் எப்படி என்பதை அவரது தோழி டிஸ்பி சமீபத்திய பேட்டியில் கூறுகையில், சாக்‌ஷி இப்படி அதிகமாக பேசுகிறவள் கிடையாது. ஆனால் இங்கே பார்த்தால் அப்படியே மாறியிருக்கிறாள்.

யார் என்ன சொன்னாலும் கூட நமக்கென்ன என்று தான் இருப்பாள். இப்போது நம்பவே முடியவில்லை. லொஸ்லியா, ஷெரீன் சுட்ட சப்பாத்தியை குத்தியது தவறு. அவர் தர்ஷன் மீது கோபம் இருந்ததாலே அப்படி செய்தேன் என கூறினார். இதை அவர் தர்ஷனிடமே காட்டியிருக்கலாமே? என கேள்வி எழுப்பியுள்ளார், டிஸ்பி.

மேலும் சாக்‌ஷிக்கு சமீபத்தில் போட்டு காட்டப்பட்ட குறும்படத்தை பற்றி டிஸ்பி கூறுகையில், நாம் எல்லாருமே மனிதர்கள் தானே. தவறு செய்தால் கூட நான் இல்லை என பக்கத்தில் உள்ளவரை காட்டுவோம், அது போன்று தான். சின்ன பொண்ணு தெரியாமல் செய்துவிட்டாள் என்றார்.