Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கப்பெண்ணே பாடல் எத்தனை மணிக்கு வரும்? காத்திருக்கும் ரசிகர்களுக்கு வந்த பதில்

விஜய்யின் பிகில் படத்தில் இருந்து முதல் பாடல் சிங்கப்பெண்ணே இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரசிகர்கள் காலை முதலே காத்திருக்கின்றனர்.

மாலையில் பாடல் வெளியாகலாம் என தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களால் தங்கள் எதிர்பார்ப்பை பதிவிட்டு வந்தனர். ரிலீஸ் டைம் சொல்லுங்க என தயாரிப்பாளரையும் நச்சரித்து வருகின்றனர். அதனால் #டைம்சொல்லுடாஅர்சு என்ற டேக் ட்ரெண்ட் ஆனது.

தற்போது பாடல் 7 மணிக்கு மேல் வருகிறது என லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் போட்டுள்ள ட்விட்டில், "உங்கள் ஆர்வம் புரிகிறது. பாடல் நிச்சயம் இன்று வந்துவிடும்" என கூறியுள்ளார்.